Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவிகள் கல்விச்சுற்றுலா சென்ற பேருந்து விபத்து.. ஒரு மாணவி பலி.. 40 பேர் காயம்..!

Siva
திங்கள், 29 ஜனவரி 2024 (06:47 IST)
ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் கல்விச்சுற்றுலா சென்ற பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த மூன்றாம் ஆண்டு மாணவி ஸ்வேதா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 
ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரியில் இருந்து பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
 ஆசை ஆசையாக மாணவிகள் கல்வி சுற்றுலா கிளம்பிய நிலையில் கிளம்பிய ஒரு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி சக மாணவி ஒருவர் பலியான சோக சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை செய்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 24 மணி நேரம் காத்திருப்பு..!

பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டதா? சென்னை மேயர் ப்ரியா விளக்கம்..!

இதெல்லாம் ஓவரா இல்ல..? டைனோசர் தோலில் பேக் செய்து விற்பனை!?

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு இன்று கடைசி தேதி.. விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு முடிந்தது.. இனி கண்டுபிடிக்கப்பட்டால் கைது?

அடுத்த கட்டுரையில்
Show comments