சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ட்ரோன்களை பயன்படுத்தி இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் அஸ்ஸாம் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதர்களால் செல்ல முடியாத பகுதிக்கு ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அதேபோல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது ட்ரோன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் உணவு போன்ற பொருட்களை அளித்திருக்கலாம் என்றும் தமிழக அரசு அதை ஏன் செய்யவில்லை என தெரியவில்லை என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது ட்ரோன்கள் வழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போது ட்ரோன்கள் பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு ட்ரோன்களை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்களை வழங்கி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்