Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் பெயரிலேயே போலி கணக்கு! முன்னாள் டிஜிபியின் திடுக்கிடும் புகார்!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (12:09 IST)
முன்னாள் டிஜிபி ரவி பெயரில் சமூக வலைதளங்களில் போலி ஐடி உருவாக்கி ஆசாமிகள் மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள நிலையில் அவர்களது பெயரில் அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது.

பொதுமக்களை தாண்டி தற்போது முன்னாள் டிஜிபியையே இந்த மோசடி கும்பல் பாதித்துள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி ரவி பெயரில் அவரது புகைப்படத்தை கொண்டே மர்ம கும்பல் ஒன்று போலி ஐடி உருவாக்கியுள்ளது. அதன்மூலம் டிஜிபி ரவிக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருட்களையும் அவர்கள் வாங்கியதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் டிஜிபி ரவி சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..!

தமிழகத்தில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments