Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 ஃபேண்டா, இப்போது ரூ.10. இருப்பினும் வாங்க ஆளில்லை

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (06:14 IST)
சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் வெற்றியாக இல்லாமல் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிப்பது தேக ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது.,




இதனால் பல திரையரங்குகள், வணிக வளாகங்கள் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்தன. மேலும் தமிழக வணிகர் சங்கமும் வரும் மார்ச் 1முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய போவதில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 75% குறைந்துவிட்டதாக வணிகர்கள் தகவல் அளித்துள்ளனர். இதற்கு பதிலாக பாரம்பரிய பானங்களான இளநீர், மோர் ஆகியவற்றின் விற்பனை பலமடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 30 ரூபாய்க்கு விற்று வந்த ஃபேண்டா குளிர்பானம் தற்போது வியாபாரம் முடங்கியதால் 10 ரூபாய்க்கு விற்று வருவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அந்த பானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் குறைந்த விலை என்பதற்காக பூச்சிமருந்து கலநத பானங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றன
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments