Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைக்கு கட்டணம்: திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு..!

Advertiesment
ராமேஸ்வரம்

Mahendran

, திங்கள், 4 மார்ச் 2024 (12:14 IST)
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது
 
இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்படுவதாவது:
 
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகின்ற 20.03.2024 க்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 
 
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் இணை ஆணையர்/செயல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் உடன்பாடு இல்லையா.? அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்..! வைகை செல்வன்..!!