Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!..

Advertiesment
kn nehru
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர் உள்ளிட்ட 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் திருச்சியில் உள்ள கே.என்.நேருவின் நிறுவனங்கள், வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்..

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடப்பது தெரிந்து கொண்டு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுகவினர் அவரின் வீட்டுக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் கே.என்.நேரு மற்றும் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்திய நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கே.என். நேரு உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9ம் தேதி ஆலோசனைக் கூட்டம்!.. தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைகிறது?...