Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான எப்ஐஆர்!

Webdunia
திங்கள், 28 மே 2018 (14:45 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.
 
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பது தெரியவந்துள்ளது.
 
அதாவது, 10,000க்கும் மேற்பட்ட கும்பல் பெட்ரோல் குண்டுகள், ஆயுதங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியதாகவும், வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கலவரத்தை கட்டுப்படுத்த வேறு வழியில்லாத நிலையில் அங்கு பொறுப்பில் இருப்பவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட அதிகாரம் உள்ளது என்றும் பின்னர் விசாரணையில் அவர் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்ட காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments