வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி: மீட்புப் பணிகள் அதி தீவிரம்
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் விடாமல் கனமழை கொட்டியது. அந்நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 122.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்
ஒரு சிலர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டும் உயரமான பகுதியில் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு அதி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
மாவட்ட ஆட்சித் தலைவரே நேரடியாக வந்து தண்ணீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் அந்த பொருட்கள் கழிவு நீர் போகும் பாதையை அடைத்துக் கொண்டதே மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுவதற்கு காரணமாக உள்ளது என்று தூத்துக்குடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்