Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாடிக்கு 1லட்சம் கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:39 IST)
தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
 
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  
 
மேட்டூர் அணை முதல் எடப்பாடி வரை காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திராவில் கடல் வழி விமான சேவை: வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு..!

ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது: அமித்ஷா

ஆழ்கடலுக்குள் செல்லும் இந்தியாவின் முயற்சி! சமுத்ரயான் திட்டம் சோதனை விரைவில்..!

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள்.., வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments