Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, புடவைகள் குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக - அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்துள்ளார்..."

J.Durai
புதன், 23 அக்டோபர் 2024 (17:51 IST)
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்களை வாடிக்கையாளர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிமுகம் செய்து வைத்தார்.
 
மேலும் வாடிக்கையாளர்களுக்கான கோ-ஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை  அறிமுகம் செய்து வைத்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி.....
 
தீபாவளி விற்பனைக்காக தேசிய வடிவமைப்பு நிறுவனம்  மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்ப நிறுவனங்களில் பயின்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான, குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ், ஜாக்கெட், கர்ட்ஸ் முதலிய இரகங்கள் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான ஆயத்த சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் இரகங்கள், வீட்டு உபயோக இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு இந்த தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது மற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு இரகம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் துணிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் "கோ-ஆப்டெக்ஸ்" குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக் கருதி இந்த சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 நிகர மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளி என்பதின் மதிப்பு ரூ.1 ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை அடுத்தமுறை கோ-ஆப்டெக்ஸின் எந்த விற்பனை நிலையத்திற்கும் சென்று துணிகள் வாங்கும் போது இந்த புள்ளிகளுக்கான தொகையை ஈடு செய்து கொள்ளலாம்.
 
இந்த தீபாவளி பண்டிகை விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த தீபாவளிக்கு கோ- ஆப்டெக்ஸ் 76 கோடி வருமானம் ஈட்டினோம்.
 
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மின் வணிக விற்பனையின் மூலம் இதுவரை ரூ.1.10 கோடி விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டு விற்பனையை விட ரூ.0.75 கோடி அதிகமாகும்.தனியார் துணி நிறுவனங்கள், கோ ஆப் டெக்ஸ் துணியின் தரத்திற்கு போட்டி போட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, புடவைகள் குடும்ப அட்டைதார்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments