திமுக நடத்திய பொதுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா கலந்து கொண்ட நிலையில் திடீரென மின் கம்பம் சாய்ந்ததாகவும் இதனை அடுத்து ஆ ராசா நூலிழையில் உயிர் தப்பியதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மயிலாடுதுறையில் திமுக சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் மேடை அருகே வைக்கப்பட்டிருந்த மின் கம்பம் திடீரென சாய்ந்து ஆ ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது.
மின்கம்பம் சாய்ந்ததை பார்த்த ஆ ராசா சுதாரித்து நகர்ந்ததால் நூலிழையில் அவர் உயிர் தப்பியதாகவும் அவருக்கு எந்த விதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து பேச்சை நிறுத்திவிட்ட ஆ ராசா உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதாகவும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.