Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்முலா 4 கார் பந்தயம்: 3 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:27 IST)
சென்னையில்  பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி 3 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

# காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணா சாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ஈ.வெ.ரா. சாலை வழியாக செல்லலாம்.

# அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.

# சிவானந்தா சாலை, கொடிமர சாலை முற்றிலும் மூடப்படும். சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை

# காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

# சென்ட்ரலில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதை யானது தற்காலிக இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

# முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணா சாலை மற்றும் கொடி மர சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈ.வெரா.சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக செல்லலாம்

# கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலை, வாலாஜா சாலை,அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா. சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments