திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (10:39 IST)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதால், அந்த பெண்ணின் தாய், பாட்டி மற்றும் அவரது இரண்டு மகள்கள் என நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒட்டன்சத்திரம், பள்ளப்பட்டி அருகே வசித்து வந்த 28 வயது பவித்ரா, திருமணமாகி இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வாழ்ந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பவித்ரா தனது தாயார் காளீஸ்வரி வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், பவித்ராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் பவித்ரா திடீரென தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.
 
இதனால் அவமானமடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி, பாட்டி செல்லம்மாள் மற்றும் பவித்ராவின் இரண்டு மகள்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட நான்கு பேரின் உடல்களும் தற்போது பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments