Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு.. திருப்பூர் அருகே பயங்கரம்..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (20:35 IST)
திருப்பூர் அருகே பல்லடம் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நபர் வீட்டின் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோர் அந்த மது அருந்திய நபரை கண்டித்தனர். இதனை அடுத்து மது அருந்தி நபர் தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து அந்த வீட்டில் புகுந்து நான்கு பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.  
 
இந்த  சம்பவம் தமிழகம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் திருப்பூரில் நடந்துள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் மகேஷ் மாரீஸ்வரி மற்றும் புஷ்பராஜ் ஆகிய நான்கு பேருக்கு சரமாரியாக அரிவாள் வேட்டு விழுந்து உள்ளது. 
 
காயமடைந்த நான்கு பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
 திருப்பூரில் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறிவால் விட்டு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்.. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு..!

இந்த வாரத்தில் இன்னும் ஒரு நல்ல நாள்.. பங்குச்சந்தை தொடர் ஏற்றம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.72000 வந்தது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments