கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சில மாதங்களில் இந்த முறை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யும் வகையில் மீண்டும் பயணம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்றவர்கள் இந்த டோக்கன்களை வாங்க தகுதி உள்ளவர் ஆகும். அதேபோல் புதிதாக டோக்கன்கள் பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய வயது மற்றும் இருப்பிடச் சான்றுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று முதல் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன் வழங்கப்படும் என்றும் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு 60 டோக்கன்கள் மற்றும் வழங்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு பேருந்து கழக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது