தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கும் தொகைக்கு அதிமுகவினர் டோக்கன் கொடுத்தது செல்லாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் பொங்கலுக்கு, பொங்கல் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் டோக்கனை நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பதிலாக அதிமுகவினர் வழங்குவதாகவும், அந்த டோக்கன்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் திமுக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பதில் அளித்த தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஊழியர்களால் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாகவும், அந்த டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பணம் அளிக்கப்படும் என்றும் இதுகுறித்த சுற்றறிக்கை இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.