Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (07:26 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. 
 
குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான நேரடி வகுப்பு தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இன்று கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதை அடுத்து கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments