Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல குவியும் பொதுமக்கள்!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (09:19 IST)
நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
 
 நாளை செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி விடுமுறை. செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை எடுத்து விட்டால் அக்டோபர் 30 மற்றும் 1 சனி ஞாயிறு, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.  
 
மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் கூட்டம் ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகிறது.
 
இதனை அடுத்து  தமிழக அரசின் போக்குவரத்து துறை  தினமும் 500 பேருந்துகள் வீதம் 1500 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளது.  சென்னையிலிருந்து மதுரை திருநெல்வேலி கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்துகளை விடப்பட்டுள்ளதாகவும் அதே போல் நாளை பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments