Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:22 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் நல்ல மழை தொடங்கியது.

இரவு விடிய விடிய விட்டு விட்டு பெய்த மழை இன்று அதிகாலை வரை பெய்து கொண்டிருந்தது என்பதும் விடிந்த பின்னரும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகள் ஆன சைதாப்பேட்டை, அசோக் நகர், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, கிண்டி, சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வருகிறது.

இருப்பினும் பெரிய அளவில் மழை இல்லை என்பதால் சாலைகளில் அதிக அளவு மழை நீர் தேங்க வில்லை என்றும் அதனால் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் பரவலாக மழை பெய்து வந்தபோதிலும் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று சென்னையில்  அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments