வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென வங்கிகள் சங்கம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது.
தற்போது வங்கிகளில் சங்கத்தின் இந்த பரிந்துரை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் எனவும், தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு முதலாளிகளின் பங்களிப்பு தற்போதைய 10% லிருந்து 14 % ஆக அதிகரிக்கிறது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
குடும்ப ஓய்வூதிய உயர்வு மற்றும் வங்கிக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை கால பரிசும் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.