காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தமாக தலைவர் ஜி.கே.வாசன்.
தமாக இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தமாக பாஜகவோடு இணைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
இதனால், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனை மீண்டும் காங்கிரஸுக்கே வருமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமாக தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து பாஜகவுடன் சேரப்போவதாக வந்த செய்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.கே.வாசன். அவர் கூறியதாவது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பாஜகவில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் எனவும் தெரிவித்துள்ளார்.
சற்றும் யோசிக்காமல் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்ததால் அழகிரி வெளியிட்ட அறிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என தொண்டர்கள் தரப்பில் பேசப்படுகிறதாம்.