Daily Horoscope
✕

விடாது கருப்பு: வழக்கம்போல் டிவிட்டரில் டிரெண்டாகும் ’கோபேக் மோடி’

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (10:13 IST)
அதிமுக நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வரும் மோடிக்கு எதிராக வழக்கம்போல் டிவிட்டரில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
மோடி தமிழகத்திற்கு வருகை தரும் செய்தி வந்தாலே கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆவது வாடிக்கையாகிவிட்டது. கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட பல விவகாரங்களால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாகிவிட்டது.
 
இந்நிலையில் இன்று அதிமுக நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் மோடிக்கு எதிராக நெட்டிசன்கள் #GoBackModi #GoBackSadistModi ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். இதனை சமாளிக்க பாஜகவினர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்...

நவம்பர் 16-ஆம் தேதி 'அசுரன்' புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழு!.. முதல்வர் விஜய் ஆலோசனை

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அதிரடி விலை குறைப்பு - ஹீரோ நிறுவனம் முடிவு...

ஈரானை தாக்க தயங்க மாட்டேன்!.. மீண்டும் யூடர்ன் போடும் டொனால்ட் டிரம்ப்....

அடுத்த கட்டுரையில்
Show comments