Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித வெள்ளி.. தொடர் விடுமுறை! படையெடுக்கும் மக்கள்! - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:38 IST)

இன்று புனித வெள்ளி கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறையாகவும் இருப்பதால் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

கிறிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி இன்று கொண்டாடப்படும் நிலையில் அடுத்தடுத்து ஈஸ்டர் சண்டே உள்ளிட்ட பண்டிகைகளும் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் மக்கள் பலரும் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட பல சர்ச்களுக்கு செல்வது அதிகமாக உள்ளது.

 

இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் கோட்டத்தில் புனிதவெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு இன்று ஏப்ரல் 18 முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 625 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி என பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments