Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலியாக பேராசிரியர்கள்..அறிக்கை கேட்டுள்ள ஆளுநர் ரவி

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (10:20 IST)
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டு உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு இதில் என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் விளக்கம் கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம்  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

ஒரு பேராசிரியர் 13 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகவும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments