Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரின் இந்தி பள்ளிகளை மூடும் வரை போராட்டம்: எச்.ராஜா

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (21:07 IST)
ஒருபக்கம் இந்தியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று கோஷமிடும் திமுக, இன்னொரு பக்கம் தனியார் பள்ளிகளை நடத்தி கொண்டு அதில் இந்தியை பிரதான மொழியாக கற்று தருகிறது. இதனை தட்டி கேட்டால் அது தனியார்கள் நடத்தும் பள்ளி, திமுக நடத்தும் பள்ளி அல்ல என்ற விளக்கம் வேறு. அப்படியென்றால் திமுக வேறு, திமுகவினர் வேறா? என்ற கேள்வியும் எழுகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுகவினர் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அந்த பள்ளிகளை மூடும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திமுக தலைவர்கள் இந்தி பள்ளிகளை நடத்திக் கொண்டிருப்பதை விவாதிக்காத ஊடகம் மீண்டும் மீண்டும் இந்தி திணிப்பு என்று விவாதிப்பது மக்களை திசை திருப்பவே. திமுகவினரின் இந்தி பள்ளிகளை மூடும் வரை தொடர் போராட்டம் தான் இந்த பொய்யர்களின் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரத்திற்கு தீர்வு' என்று பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments