Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து விவகாரம்: ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (09:49 IST)
வைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
 
இதுகுறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி, வைரமுத்து பற்றி சில பாடகிகள் என்னிடமும் புகார் கூறினர். வைரமுத்து மீதான புகாரை முதலிலேயே கூறி வரை அடக்கியிருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
 
இதற்கிடையே ஏற்கனவே ஆண்டாள் விஷயத்தில் வைரமுத்து மீது கோபத்தில் இருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், என் தாய் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து நிம்மதியாக தூங்க முடியாது எனவும் காட்டமாக பேசினார்.
 
இந்நிலையில் எதிரியோட எதிரி நமக்கு நண்பன் என்பது போல, வைரமுத்துவிற்கு எதிராக பேசிய ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தங்கை ஏ.ஆர். ரெஹானா கூறியுள்ளார். நன்றி சகோதரி. உங்கள் வார்த்தை அட்சர லக்ஷம் பெறும் என பதிவிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்