நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கின்ற நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளி பர்ச்சேஸ் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட பல கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், இன்று இரவு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய கிழக்கு கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே தீபாவளி பர்ச்சேஸ்-க்காக வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.