தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 20 நவம்பர் 2025 (14:05 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நாளை முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்வதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய பகுதிகளிலும்  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும். அதேபோல் இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
நவம்பர் 24 அன்று, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், பொதுமக்கள் இந்த ஆறு நாட்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments