8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 23 மே 2025 (14:54 IST)

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் “அடுத்த 2 நாட்களில் கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவ வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்

 

இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

 

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

நாளை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் குறையும் வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments