Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:20 IST)
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்  இன்று காலை முதல் 14 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எனவே இந்த 14 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 
மேற்கண்ட 14 மாவட்டங்கள் மட்டும் இன்றி மற்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் வரும் ஆறாம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக்ஜாம் நிஜா புயல் வரும் ஆறாம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுவரை தமிழகம் ஆந்திரா பகுதியில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments