Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:21 IST)
நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக ஏற்கனவே தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments