Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு எத்தனை மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:15 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு திசையிலிருந்து வரும் காற்றின் வேக மாற்றம் காரணமாக மழை பெய்து வருவதாகவும் அறியப்படுகிறது.
 
அந்த வகையில், இன்று இரவு செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மேலும், நாளை கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments