Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் மழை: போக்குவரத்து பாதிப்பு!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (20:32 IST)
சென்னையின் பல பகுதிகளில் தற்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 
 குறிப்பாக மெரினா கடற்கரை, அண்ணா சாலை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், பிராட்வேஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது 
 
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
சென்னையில் மழை பெய்துள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments