Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு.. தென் தமிழகம், இலங்கையில் கனமழை?

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:18 IST)
வங்கக் கடலில் தோன்றிய உள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது வலுவடைந்து உள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் இலங்கையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெறக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகம் இலங்கையில் நல்ல மழை பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments