வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்தது என்பதும் அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மோக்கோ புயல் கரையை கடக்க இருப்பதை அடுத்து இனிமேல் தமிழகத்திற்கு இப்போதைக்கு மழை இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டத்தில் மட்டும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.