Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (08:40 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் இரண்டு புயல்கள் காரணமாகவும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது என்பதும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. இந்த மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை விருதுநகர் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் 24 மணி நேரத்தில் அதிராம்பட்டினத்தில் 13.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் நல்ல மழை பெய்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் கைது! - அமைச்சர் கீதா ஜீவன் கொடுத்த வாக்குறுதி?

எங்க பங்காளி சண்டைலாம் தாண்டி.. திமுகவை வீழ்த்துவதுதான் ஒரே இலக்கு! - டிடிவி தினகரன்

ராஜ்யசபா எம்பி.. மத்திய கேபினட் அமைச்சர்.. அண்ணாமலையை தேடி வரும் பதவி..!

நீலகிரி சுற்றுலா: இன்று முதல் 5 இடங்களில் இ-பாஸ் சோதனை! - சுற்றுலா பயணிகள் நிம்மதி!

கேள்வி தவறு என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வுத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments