Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த 24 மணி நேரத்தில் எங்கு அதிக மழை பொழிவு?

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (13:25 IST)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனம், ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. 

 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று கரையை கடந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தாலும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனம், ஜமுனாமரத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பொழிவு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments