Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பொதுமக்கள் கலக்கம்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (09:48 IST)
பெட்ரோல் டீசல் விலை தொடர்ச்சியாக 5வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது.  இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். 
 
இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. இதனால் பெட்ரோல் விலையும் பழையபடியே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
 
கடந்த 5 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்திலே உள்ளது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ. 72.79 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 53 காசுகள் அதிகரித்து ரூ. 67.78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments