Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்புகளுக்கு தீபாவளி விடுமுறை: எத்தனை நாட்கள் தெரியுமா?

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (08:11 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று முதல் அதாவது நவம்பர் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி தினத்தில் தினத்தில் குழந்தைகள் தினமும் வருவதால் அன்றைய தினம் மட்டும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், போட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன 
 
ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்கு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த பல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை எடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments