தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதனிடையே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22, 23ம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.