Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்க அத்தைக்கு சசிகலா வாரிசா? அதிரடி எண்ட்ரி கொடுத்த ஜெ.தீபா !

எங்க அத்தைக்கு சசிகலா வாரிசா? அதிரடி எண்ட்ரி கொடுத்த ஜெ.தீபா !
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (17:08 IST)
சசிகலா எப்படி ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும் என தீபா கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் வருமான வரித்துறை அவர் மீதான சில சொத்து குறித்த குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி கேட்டிருந்தது.  
 
இதற்கு சசிகலா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பணமதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்று எந்த தகவலும் தெரியாத என தெரிவித்துள்ளார்.   
 
மேலும், ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுசின்ங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகிவற்றில் பங்கு இருக்கிறது. அவை எனக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இது குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்கெனவே 2 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு களின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளோம். 
 
ஆனால், ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சட்டப்பூர்வ வாரிசுகளும் இல்லை என்பது போல, தற்போது இந்த அறிக்கையை சசிகலா வெளியிட்டுள்ளார். எந்தெந்த நிறுவனங்களில் அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார்கள். அவற்றின் விவரம் என்ன, சொத்து மதிப்பு என்ன, தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவர் விளக்க வேண்டும் என கேட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்குடியினருடன் ராகுல் காந்தி நடனம் ; வைரலாகும் வீடியோ