Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்...?

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (19:34 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது வரும் மார்ச் 3 ஆம் தேதி இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள்      சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்  பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே கட்சி விலகிய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கியுள்ள திமுக தலைமை.
 
அதேபோல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யடவுள்ளது சில நாட்களில் முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் மார்ச் 3 ஆம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கப்படும் என்பது இறுட்ய்ஹி செய்யப்படுமெனக் அக்கட்சியின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments