Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பையை வெல்வது எப்படி? - இந்திய அணிக்கு சத்குரு கொடுத்த டிப்ஸ்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (19:08 IST)
உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று பைனல்ஸுக்கு முன்னேறி உள்ளது நம் இந்திய கிரிக்கெட் அணி. நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தை காண ஒட்டுமொத்த தேசமும் ஆவலாக உள்ளது.


இந்த சூழலில் உலக கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்வதற்கு சத்குரு கொடுத்த டிப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  “இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்வதற்கு நீங்கள் ஏதேனும் டிப்ஸ் வழங்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் சத்குரு, “கிரிக்கெட் ஆடுவது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதுகுறித்து நான் ஏன் எதாவது சொல்ல வேண்டும்? ஆனால், இப்போது உலக கோப்பையை வெல்வது எப்படி என கேட்கிறீர்கள். கோப்பையை வெல்ல முயற்சிக்காதீர்கள். வெறுமனே அந்த பந்தை மட்டும் சிறப்பாக அடியுங்கள்.

இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களும் உலக கோப்பை வெல்ல வேண்டும் என ஏங்குகிறார்கள் என்ற எண்ணத்துடன் ஆடினால், நீங்கள் பந்தை தவறவிட்டுவிடுவீர்கள். அல்லது உலக கோப்பையை வென்றால் கிடைக்கும் விஷயங்கள் குறித்த கற்பனையுடன் ஆடினால் உங்கள் விக்கெட்டை  பறிகொடுத்துவிடுவீர்கள். எனவே, உலக கோப்பை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்களை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments