Publish Date: Mon, 02 Nov 2026 (16:56 IST)
Updated Date: Mon, 02 Nov 2026 (16:57 IST)
காலி மதுபான பாட்டிகளை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஏனெனில், ஏற்கனவே பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 மற்றும் காலி பாட்டிலுக்கு சேர்த்து ரூ.10 என மொத்தம் ரூ.20 சேர்த்து வசூலிக்கும்போது மதுப்பிரியர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள்.
இந்நிலையில்தான், சமீபத்தில் பாட்டிலை திரும்பப்பெருவதற்கான ரூ.10-ஐ அரசு பாட்டிலின் எம்.ஆர்.பி விலையிலேயே சேர்த்தது. அதோடு, பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு ரூ.10-ஐ பெற்றுக்கொள்ளல்லாம் என அமைச்சர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். அதோடு, நவம்பர் 1ம் தேதி முதல் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது எனவும் அரசு ஆர்டர் போட்டது.
இது டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பல மாவட்டங்களிலும் கடைகளை திறக்காமல் 960 டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து 960 ஊழியர்களுக்கும் மெமோ வழங்கப்பட்டது. அதோடு, 160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று கடைகளை திறக்காதவர்களுக்கு மீண்டும் மெமோ வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க