Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்குழந்தை பிறக்காததால் மனைவிக்கு எச்.ஐ.வி ஊசி போட்ட கணவர்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (18:54 IST)
திருமலையில் உள்ள குண்டூர் பகுதியில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால், மனைவிக்கு எச்.ஐ.சி ஊசி போட்ட கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருமலை குண்டூரில் உள்ள பகுதியில் உள்ள தாடேப்பள்ளியில் வசிப்பவர் சரண்(35). இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மாதவி(32) என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரணின் 2 தம்பிகளுக்கும் ஆண் குழந்தைகள் உள்ளதால் தனக்கும் ஆண் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.

இந்த  நிலையில், சமீபத்தில், தன் மனைவிக்கு ஒரு மருத்துவர் மூலம் ஊசி செலுத்தியுள்ளார். இதனால் உடற் சோர்வு அடைந்த அவர் வேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தகவல் தெரிந்தது.

இதையடுத்து, போலீஸார் சரணைக் கைது செய்து, இதுகுறித்து உண்மை கண்டறியும்  போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Edited By Sinoj
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments