Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாமாண்டு திருமண நாளன்று மனைவியைக் கொன்ற பொறியியல் பட்டதாரி

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (08:57 IST)
சென்னையில் முதலாமாண்டு திருமண நாளன்று கணவன், மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், பொறியியல் பட்டதாரியான இவர் மதுமிதா என்ற பெண் பொறியியல் பட்டதாரியை காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
 
மதுமிதா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் வெங்கடேசனுக்கு நிரந்தர வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வெங்கடேசன் - மதுமிதா தம்பதியினருக்கு முதலாமாண்டு திருமண நாள். வழக்கம் போல் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப்போகவே ஆத்திரமடைந்த வெங்கடேசன், மதுமிதாவை கத்தியால் குத்தியுள்ளார். பின் வெங்கடேசனும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் அலறியுள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதுமிதா உயிரிழந்தார். வெங்கடேசன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்