Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது; சசிகலா திட்டவட்டம்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (07:42 IST)
மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என  வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தினார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேர்தலின் போது ரெய்டு நடத்திய வருமான வரித்துறை கடந்த இரண்டு மாதங்களில் சசிகலா குடும்பத்தையும், அவர்கள் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும்  சோதனையை நடத்தினர்.
 
சசிகலாவின் உறவினரான கார்த்திகேயனின் வீடு, ஸ்ரீ சாய் கார்டன், ஸ்ரீ சாய் நிறுவனம்,  மிடாஸ் நிறுவனம், மேலும் தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.  இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணக்கில் வராத ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி பதிலளித்தனர்.
 
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு சிறை நிர்வாகம் மூலம் கடிதத்திற்கு பதிலளித்துள்ள சசிகலா, தான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறையினர் முன்னிலையில் ஆஜராக இயலாது என்று கூறியுள்ளார். விரதம் முடிந்த பிறகு நேரில் ஆஜராவது குறித்து சொல்கிறேன் என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments