Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரிக்கு இடம் கொடுத்தால் அது கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம் - சீமான் ’டுவீட்’

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:22 IST)
இந்நாட்டின் பூர்வக்குடிகளை, வந்து குடியேறியவர்கள் 'உங்கள் குடியுரிமை சான்றிதழ் காட்டுங்கள்' என்கிறான்  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக தலைமையிலான  ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
நரிக்கு இடம் கொடுத்தால் அது கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்;  அதுபோல் இந்நாட்டின் பூர்வக்குடிகளை, வந்து குடியேறியவர்கள் 'உங்கள் குடியுரிமை சான்றிதழ் காட்டுங்கள்' என்கிறான்  என  அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments