Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ எம்பியாக பதவியேற்றதை முன்னிட்டு ... டீ ஒரு ரூபாய்க்கு விற்பனை

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (21:06 IST)
வை.கோ. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை முன்னிட்டு குளித்தலை நகர துணைசெயலாளர் டீகடையில் ஒரு ரூபாய்க்கு டீ யும், ஒரு ரூபாய்க்கு வடையும் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டம், குளித்தலை பெரியாபாலம் பகுதியில் அங்காளம்மன் டீ ஸ்டால் நடத்திவருபவர் ரகுபதி. இவர் ம.தி.மு.க.கட்சியின் குளித்தலை நகர துணை செயலாளராக இருந்து வருகிறார். ம.தி.மு.க பொது செயலாளர் வை.கோ. அவர்கள் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்வின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குளித்தலை நகரத்தில் உள்ள பொதுமக்கள், ஏழை எளியோர்கள் பயன்பெரும் வகையில் இன்று காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை அவரது டீ கடையில் ஒரு ரூபாய்க்கு டீ யும், ஒரு ரூபாய்க்கு வடையும் வழங்கிவருகிறார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை நகர செயலாளர் திவேஷ்வர்தன், மாவட்ட பிரதிநிதி கணேசன் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு  விழாவை சிறப்பித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments