Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் மழை.. 5 இடங்களில் மட்டும் 100 டிகிரி தாண்டிய வெயில்! – மக்கள் நிம்மதி!

Prasanth Karthick
திங்கள், 13 மே 2024 (19:47 IST)
தமிழ்நாட்டில் பல நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.



கடந்த ஏப்ரல் முதலாகவே வெயில் அதிகரித்து வந்த நிலையில் அக்கினி நட்சத்திரமும் தொடங்கியதால் தினசரி 15 மாவட்டங்களுக்கும் மேல் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகி வந்தது. ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது.

இந்நிலையில் கடந்த வாரம் முதலாக பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வெப்பநிலை பல பகுதிகளிலும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நேற்று மதுரையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் வேலூரில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணி, கரூரில் 102 டிகிரியும், நாமக்கலில் 101 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதும் மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments